வால்பாறையில் கரடி தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரம்.!!

வால்பாறை: வால்பாறையில் கரடி தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


வால்பாறை: வால்பாறையில் கரடி தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு தொழிலாளியைக் கரடி தாக்கியுள்ளது.

வால்பாறையை அடுத்த அய்யர் பாடி இரண்டாம் டிவிசனை சேர்ந்த வசந்த பிரபாகரன் கரடியால் தாக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மீண்டும் கவர்க்கல் தேயிலைத் தோட்டத்தில் சேகர் என்பவர் கரடியால் தாக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள புதர்களை உடனடியாக அகற்றும்படி நிர்வாகத்திற்கு வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.



வனத்துறையினரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து புதர்களும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் கரடிகளுக்குப் பிடித்த உணவான பலா மரங்களில் உள்ள காய்கள் பழங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. பழ மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...