தொண்டாமுத்தூரில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்.!! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.!!

கோவை: தொண்டாமுத்தூரில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


கோவை: தொண்டாமுத்தூரில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஜாகீர் நாயக்கன் பாளையத்தில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய ஊராட்சி செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அன்னபூரணி துரைசாமி உள்ளார்.

கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. தொடர்பாக அதிமுக ஊராட்சி செயலாளர் ரங்கராஜ், வார்டு உறுப்பினர்கள் ராமசாமி சுஜாதா பழனிச்சாமி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில், ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலாளர் காஜா மைதீன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய ஊராட்சி செயலாளராக பரமேசுவரி என்பவரை நியமனம் செய்து நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...