கோவையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு!

கோவை: கோவையில் ஆக்கிரமிப்பு வணிக கட்டிடங்கள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டனர்.


கோவை: கோவையில் ஆக்கிரமிப்பு வணிக கட்டிடங்கள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டனர்.

கோவை உப்பாரா வீதியில் பேட்டை விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 265 சதுர அடி நிலத்தில் ஆக்கிரமித்து வணிக கட்டிடம் இருந்தது.

இதேபோல், பெரிய லட்சுமி நாராயண வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான 1,060 சதுர அடி பரப்பில் இரண்டு வணிக கட்டிடங்களும் இருந்தன. இந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், கோவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கோவில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து, நேற்று மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி, தெற்கு தாசில்தார் புனிதவதி, ஆகியோர் முன்னிலையில் பெரியகடைவீதி போலீசாரின் பாதுகாப்புடன் அங்கு விரைந்து சென்றனர். பின்னர், பொக்லைன் மூலமாக ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டன.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1.75 கோடி ஆகும். இது போன்று ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...