என் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் - எஸ். பி. வேலுமணியின் அண்ணன் அன்பரசன் போலீஸ் கமிஷனரிடம் புகார்

கோவை: அதிமுக பிரமுகர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி அண்ணன் அன்பரசன் கோவை காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.


கோவை: அதிமுக பிரமுகர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி அண்ணன் அன்பரசன் கோவை காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் கோவை புதூரைச் சேர்ந்தவர் எஸ்.பி.அன்பரசன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அண்ணன் ஆவர். இன்று கோவை மாநகர காவல்துறை ஆணையரைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவேங்கடம் என்பவர் தெரிந்த நபர் தாமோதரனிடம் உதவியாளராக இருந்தார். கட்சிக்காரர் எனக்குத் தெரிந்த நபர். என்ற அடிப்படையில் தொழில் நொடித்துவிட்டது. மனைவியின் நகை சொத்து அனைத்தும் தொழிலுக்காக அடமானம் வைத்து நஷ்டம் அடைந்து விட்டேன் என்று தெரிவித்தார்.

மேலும் என்னிடம் ரூபாய் 5-லட்சம் கடன் கொடுத்தால் நகைக்கு வட்டி கட்டி ஏலத்தைத் தவிர்த்து விடுவேன் எனக் கூறி காலில் விழுந்து கெஞ்சினார். சொந்த ஜாமீனில் நான் தெரிந்த நண்பரிடம் கடனாகக் கேட்டதன் அடிப்படையில் எனது நண்பர் ரூபாய் 5-லட்சத்தைக் கொடுத்தார்.

திடீரென ஒருநாள் நிருபர் ஒருவர் திருவேங்கடம் கூறியதாகச் செய்தி வெளியிடப் போவதாக என்னிடம் விளக்கம் கேட்டு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு நான் விளக்கம் கொடுத்தேன்.

நிருபரின் குறுஞ்செய்தி வந்தபோது நான் திருவேங்கடத்தை தொடர்பு கொண்டு என்னப்பா இப்படி செய்தி போடப்போவதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது என்று கேட்டதற்கு, ரூபாய் 1.5 கோடி கொடுத்தால் தடுத்து நிறுத்தி விடுகிறேன் என்று திருவேங்கடம் என்னிடம் கூறினார்.

நான் முடியாது என்று கூறி துண்டித்து விட்டேன். செய்தி வெளியான பின்பு சொன்னதைச் செய்து விட்டேன் எனத் திருவேங்கடம் தெரிவித்தார். மேலும் அவர் என்னிடம் பார்த்தாயா பணம் கொடுத்து விடு இல்லை என்றால் உன்னையும் உன் தம்பியையும் மானத்தை வாங்கி விடுவேன் என எனக்குக் கட்சியிலும் பலம் பெற்றுவிடும் எனக் கூறி மிரட்டினார்.

நான் கேட்ட பணம் கிடைக்காததால் நான் அளவுக்கு வேணாலும் இறங்குவேன் இன்னும் இரண்டு நாளில் போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன். அதற்கு அப்புறம் நீ பணம் கொடுக்கலைன்னா என்ன வேணாலும் பண்ணுவேன். நீ பணம் தந்தால் லாபம், இல்லைனா எனக்குக் கட்சியில் நல்ல பெயர் கிடைக்கும் எப்படிப் பார்த்தாலும் எனக்கு லாபம் தான் என்றும் திருவேங்கடம் என்னை மிரட்டி இருக்கிறார்.

இவருடைய பணத்தாசையால் என் உயிருக்கும் என் குடும்பத்தாரின் உயிருக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...