கடந்த 2-மாதங்களில் 2-டன் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின் தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்.!!

கோவை: கடந்த 2 மாதங்களில் 2 டன் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின் தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


கோவை: கடந்த 2 மாதங்களில் 2 டன் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின் தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இவற்றைக் கொண்டு வருவதில் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பரவலின் போது பல்வேறு மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் விமானங்கள் மூலம் கோவைக்குக் கொண்டு வரப்பட்டன.

நோய்த்தொற்று தடுப்பூசி சென்னையிலிருந்து முன்பு சாலை வழியாக அதிக அளவில் கொண்டுவரப்பட்டன. மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்த காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாகத் தடுப்பூசிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக சாலை வழியாக மட்டுமின்றி விமானங்கள் மூலமும் தடுப்பூசிகள் கோவைக்குக் கொண்டு வருவது அதிகரித்துள்ளன.

விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவை விமான நிலையம் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்குப் பயன் அளித்து வருவதைக் கருத்தில் கொண்டு விமானங்களில் தடுப்பூசிகளைக் கொண்டுவருவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

'இண்டிகோ' ஏர்லைன்ஸ் சார்பில் மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பூனே நகரங்களிலிருந்து அதிக அளவு தடுப்பூசிகள் கோவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டுடன் எடையிலான 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதங்களிலும் விமானங்களில் தடுப்பூசி கொண்டு வரப்படுவது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...