சூலூரில் கஞ்சா விற்பனை அமோகம்.!! 4-பேர் கைது.!! 4-கிலோ கஞ்சா பறிமுதல்.!!

கோவை: கோவை சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4-பேர் கைது செய்யப்பட்டு 4-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4-பேர் கைது செய்யப்பட்டு 4-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் கோவை புறநகர்ப் பகுதியில் உள்ள காவல் துறையினர் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4-பேர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 4-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சூலூர் காவல்துறை கூறியபோது:-

கோவை மாவட்டம் ,சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் செந்தில் முருகன் (Gr1 2038) அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக பிதேஷி பாக், பிஹாஷ் சாபு மற்றும் சஞ்சிபா ரானா ஆகிய வடமாநிலத்தவர்கள் அங்கு இருந்துள்ளனர்.

அவர்களை அழைத்து விசாரணை செய்யும்போது அவர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, உடனே முதல்நிலைக் காவலர் செந்தில் முருகன் அவர்கள் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.நவநீத கிருஷ்ணன் அவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

உதவி ஆய்வாளர் திரு.நவநீத கிருஷ்ணன் அவர்கள் மூவரையும் அழைத்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்த 4 கிலோ கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.

எனவே,மேற்படி மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 4-கிலோ கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தும் மற்றும் கஞ்சா விற்பனை செய்த ரூபாயை வைத்திருந்த பக்த பை என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 10,100/- கைப்பற்றினர். மேற்படி 4-நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...