திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தைத் துவக்கினர்.

கொரானா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் முறைகேடாகக் குறிப்பிட்ட நேரத்திற்கு மீறி மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது போராட்டத்தைத் துவக்கினார்.

இந்த உண்ணாவிரதத்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்குத் தமிழக அரசே பொறுப்பு எனவும் விளம்பர பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.