மக்கள் குறைதீர் கூட்டம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் குவிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள்.!!

திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் குவிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் குவிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாகக் கடந்த சில வாரங்களாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாத சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக தொலைப்பேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வந்தாலும் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக தங்கள் மனுக்களை வழங்கி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று திடீரென திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாகப் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.

இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டதோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் குறித்த முறையான அறிவிப்பு அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் மாற்று ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...