கோவை: கோயம்புத்தூர் ரோட்டரி மெரிடியன் சங்கம் மற்றும் சாய்பாபாகாலனி ஒன்கேர் மருத்துவமனை,ஆகியோர் இணைந்து நடத்திய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச அறுவைச் சிகிச்சை பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயனடைந்தனர்.

கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபர்ஸ்ட் ஸ்டெப் எனும் தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இலவச பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை முகாமை கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஒன்கேர் மருத்துவமனையுடன் இணைந்து கோயமுத்தூர் ரோட்டரி மெரிடியன் சங்கத்தினர் துவக்கியுள்ளனர்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் இந்த முகாமில் பயனடைந்துள்ள நிலையில், 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முகாம் ஒன் கேர் மருத்துவமனையில் நடைபெற்றது.
சக்ஷம் அமைப்பினரும் இணைந்து நடத்திய இதற்கான துவக்க விழாவில் ஒன்கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், எலும்பு மற்றும் முத்துக்குத்தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரும் ஆன டாக்டர் அப்துல் சலாம் தலைமை வகித்தார்.
கோயமுத்தூர் ரோட்டரி மெரிடியன் நிர்வாகிகள் மதனகோபால், பெரியசாமி, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார் துவக்கி வைத்தார்.
முகாமில், கை கால் பிறவிக் குறைபாடுகள்,தசை மற்றும் மூட்டு இறுக்கம், வளைந்த பாதங்கள்,கால் முட்டிகள், இடுப்பு எலும்பு விலகிய தன்மை, முதுகுத் தண்டு வளைந்த நிலை போன்ற உடல் இயக்க குறைபாடுகளுடைய 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் பங்கு பெறலாம் எனவும், அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோர்க்கு எந்தவித கட்டணமுமின்றி அறுவைச் சிகிச்சை செய்வதாகவும், மேலும் கொரோனா கால விதிமுறைகள் இருப்பதால் முன்பதிவு அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும், இது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஒன்கேர் மருத்துவமனை சார்பாக அறுவைசிகிச்சைகள் செய்துள்ளதாக மருத்துவர் அப்துல் சலாம் தெரிவித்தார்.