கோவை ஒண்டிபுதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டம் - 20-ம் தேதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு.!!

கோவை: கோவை ஒண்டிபுதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து வரும் 20-ம் தேதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.


கோவை: கோவை ஒண்டிபுதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து வரும் 20-ம் தேதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

கோவை ஒண்டிபுதூர் கழிவுநீரைச் சுத்திகரித்து அதை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டத்தைப் பார்வையிட திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களின் வேண்டுகோளை ஏற்றுச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யா நாதன் அவர்கள் வரும் 20ம் தேதி பார்வையிட உள்ளார்.

இது குறித்து திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் வெளிவரும் கழிவுநீரைச் சுத்திகரித்து அதை விவசாயத்திற்குப் பயன்படுத்த அரசின் அங்கீகாரமும், ஆதரவும் வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. சிவ.வீ.மெய்ய நாதன் அவர்களிடம் எடுத்துரைத்தோம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இது குறித்து முழுமையாகக் கேட்டறிந்த பின்னர் வரும் 20ம் தேதி நேரடியாக வந்து இத்திட்டத்தைப் பார்வையிடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதையடுத்து கோவையில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் ஓர் கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவும் அதில் பங்கேற்றுப் பேசத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த கலந்தாய்வுக் கூட்டத்தைக் கழக சுற்றுச்சூழல் அணி ஏற்பாடு செய்யும் எனவும் அவரிடம் உறுதி கொடுத்தேன்.

கழிவுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துவது என்பது தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக முன்னெடுக்கும் முயற்சியாகும், அதை நம் கழக அரசு மேற்கொண்டு வருவது வரவேற்பிற்குரியது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...