மாருதி சுசூகி ஓலாவுடன் இணைந்து ஓட்டுநர் பயிற்சி அளிக்க புதிய திட்டம் ஒப்பந்தம்



மாருதி சுசூகி  இந்திய லிமிடெட் நிறுவனமும், ஓலா கால் டாக்சி நிறுவனமும் இணைந்து ஓட்டுநர்களுக்கான பயிற்சி அளிக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாருதி ஓலா பயிற்சி என்னும் இந்த திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் நபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் மூதற்கட்டமாக பெங்களூர், சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மும்பை, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்த உள்ளது.

இதுகுறித்து, மாருதி சுசூகியின் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது:-

மாருதி நிறுவனமானது சிறந்த முறையில் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துகிறது. வாகனம் ஓட்டுவதில் உள்ள குறைபாடுகளால்தான் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்பயிற்சியில் பங்குபெறுவோருக்கு வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி சீராக செயல்படுவது உள்ளிட்டவையும் கற்றுத்தரப்பட உள்ளது.

இப்பயிற்சி 370 மாருதி ஓட்டுநர்கள் பள்ளி மூலம் வழங்கப்பட உள்ளது. நாங்கள் 40 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு 3 வருடத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

ஓலாவின் முதன்மை செயல் அலுவலர் பிரனை ஜிவ்ராஜ்கா கூறியதாவது:-

மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. அதனால், இத்துறையில் வளரும் சிறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளது. நாங்கள் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஓட்டுநர்களை உருவாக்கப்போகிறோம்'' என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...