கோவை: கோவை அருகே தொடர்ந்து மனைவி செல்போனில் பேசி வந்ததால் சந்தேகம் அடைந்த கணவர், கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவரைத் தேடி வருகின்றனர்.

கோவை கணபதி அடுத்த காந்திமா நகர் பகுதி மூன்றாவதுல் வீதியில் குமார் (எ) லவேந்திரன்(49). அவர் மனைவி கவிதா (32) மகன்கள் பூபதி மற்றும் யோசுவா ஆகியோருடன் குடும்பத்துடன் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வருகிறார். குமார் என்கிற லவேந்திரன் பழைய கட்டடம் இடிக்கும் பணி செய்து வருகிறார். கவிதா வீட்டின் அருகிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். கவிதாவிற்கு ஏற்கெனவே திருமணமாகி பூபதி என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இலங்கை அகதியான குமார்(என்கிற) லவேந்திரனை திருமணம் செய்து தனது முதல் மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கவிதா செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்த காரணத்தினால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு இருந்துள்ளது. இதனால் கவிதா கோபித்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டைவிட்டு நண்பர் வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டிற்கு வந்த கவிதாவுக்கும் லவேந்திரனுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கோபத்தில் இருந்த குமார் (எ) லவேந்திரன் கவிதாவை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனையடுத்து, குமார் (எ) லவேந்திரன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். இதனை பக்கத்து வீட்டில் குடியிருந்த கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் ஓடிச் சென்று பார்த்துள்ளார். ஆனால், தனது அக்கா கவிதா இறந்ததைக் கண்டு உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடதிற்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார் மனைவியை அடித்துக் கொன்ற லவேந்திரனை வலைவீசித் தேடி வருகின்றனர்.