கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5 பேர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5 பேர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இது சிறப்பான செய்தி. தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகள். அகில இந்திய கொள்கை வகுப்பிலும் இந்த நபர்களின் கருத்துகள் இருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் எட்டிய உச்சத்திற்கு மீண்டும் திரும்பும் என குறிப்பிட்டுள்ளார்.