கோவை: கோவையில் வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள மெட்டுவாவி பகுதியில் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ., ஏசு பாலன் சூதாட்டம் நடப்பதை உறுதி செய்தார். தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க அவர்களிடம், ரூ.7,000 பணம் பெற்றுள்ளார்.
பின்னர், இது குறித்து எஸ்.பி.,யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி., உத்தரவையடுத்து, நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் விசாரித்தார். இதில், ஏசு பாலன் பணம் பெற்றது உறுதியானது. இதையடுத்து, ரூரல் எஸ்.பி., செல்வநாகரத்தினம், எஸ்.எஸ்.ஐ., ஏசுபாலனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.