கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்த நிலையில், புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர், துடியலூர் பகுதியில் இந்த சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் தான் வசித்தனர். இதனால் மாநகராட்சி பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே இரண்டாவது அலை துவங்கிய போது ஆரம்பத்தில் கோவை மாநகராட்சி பகுதியில் அதிகமாக காணப்பட்டது.
இதனையடுத்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோனையுடன்,ய ஆக்சிஜன் அளவும் சரிபார்க்கப்பட்டது. தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகளால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 65 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைந்தது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 48.9 சதவீதம் என்று உள்ளது. மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கையால் 50 சதவீத்திற்கும் கீழே பாதிப்பு குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் ஊரக பகுதியில் சூலூர், மதுக்கரை, துடியலூர், அன்னூர் ஆகிய வட்டாரங்களில் கடந்த மாதம் தொற்று அதிகமாக காணப்பட்டது. தற்போது இந்த பகுதியில் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் பகுதியில் 5 சதவீதத்திற்கும் கீழ் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அதிகரித்து 6.68 சதவீதமாக உள்ளது. துடியலூர் பகுதியில் 7.51 சதவீதம் என்ற அளவில் உள்ளது.