கோவை: கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 25 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள இந்த சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் கோவை மாநகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. இருப்பினும் இந்த அணையில் 45 அடி உயரம் வரைக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. கடல்மட்டத்தில் இருந்து 878 மீட்டர் உயரத்தில் இந்த அணை உள்ளது. இந்த அணையில் 650 மில்லியன் கன அடிநீர் தேக்கி வைக்கலாம்.
கோடை காலமான ஏப்ரல், மே, மாதங்களில் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்த அதிகளவு தண்ணீர் எடுக்கப்பட்டது. மேலும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் வெகுவாக சரிய துவங்கியது. குறிப்பாக அணையின் கடைசி வால்வில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் துவங்கி பரவலாக பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த வாரம் முதல் வால்பாறை, ஆழியாறு, சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை நன்றாக பெய்து உள்ளது. இந்த மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் நன்றாக உயர்ந்து உள்ளது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வெயில் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் குறைவாக சரிந்தது. பின்னர் கோடை மழையினால் 15 அடியாக உயர்ந்தது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், அதன் தாக்கம் காரணமாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 25 அடியாக உயர்ந்து உள்ளது.
தற்போது அணையில் இருந்து மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக தினமும் 97.30 எம்எல்டி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அணையின் நீர்மட்டும் மேலும் அதிகரிக்கக்கூடும். அணை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.