கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, 'டெண்டர்' முறைகேடு வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில், ஒப்பந்த பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கமும், தி.மு.க., - எம்.பி., - ஆர்.எஸ்.பாரதியும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதில் அமைச்சராக இருந்த வேலுமணி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை, அ.தி.மு.க., அரசு ஏற்றது. ஆனால், நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் குறித்து, கேள்வி எழுப்பி இருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகினர். அறப்போர் இயக்கம் சார்பில், வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜராகி, 'லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில், ஆதாரமில்லை என கூறப்பட்டது. அதை ஏற்க முடியாது என பதில் அளித்துள்ளோம்.
அமைச்சராக இருந்தவர் தாக்கல் செய்த, அவமதிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆவணங்கள் நிறைய இருப்பதால், நேரடி விசாரணை வேண்டும்,' என்றார். வேலுமணி சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி, இவ்வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. விஜிலன்ஸ் அதிகாரி விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்து விட்டார். 'அதை, அரசும் ஏற்றுள்ளது. விசாரணை அறிக்கையை, அரசு ஏற்றுக் கொண்டு விட்டால், அதன்பின் ஒன்றும் இல்லை,' என்றார்.
இதையடுத்து, அரசு தான் அறிக்கையை ஏற்றுள்ளது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, நேரடி விசாரணைக்காக, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.