கோவை: முதலமைச்சரின் கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிதி வழங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது தாய்முடி தேயிலைத் தோட்டம். இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை தாய்முடி எல்.டி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களது ஒரு நாள் ஊதியமான ரூபாய் 45 ஆயிரத்தை வால்பாறை வட்டாட்சியர் ராஜா அவர்களிடம் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

வட்டாட்சியர் ராஜா அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்