வால்பாறையில் யானை வழித்தடங்களை கண்டறிந்து மீட்க அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை - இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

கோவை: வால்பாறையில், நீதிமன்ற உத்தரவுப்படி யானை வழித்தடங்களை கண்டறிந்து மீட்க, அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில், நீதிமன்ற உத்தரவுப்படி யானை வழித்தடங்களை கண்டறிந்து மீட்க, அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், அதிக அளவில் யானைகள் உள்ளன. வால்பாறையில், யானைகள் ஆண்டாண்டு காலமாக நடந்து செல்லும் வழியை மறித்து, பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சமீப காலமாக யானை வழித்தடத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு 'சொகுசு' விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் அதிக அளவில் உள்ளன. யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அவை திசை மாறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. எனவே யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து அவற்றை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வால்பாறையில் உள்ள யானைகள் வழித்தடத்தை மீட்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் யானைகள் வழித்தடம் மீட்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கை இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து, அவற்றை வனப்பகுதியுடன் இணைக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், விரைவில் யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து மீட்கப்படும். வழித்தடம் மீட்கப்பட்டால், வால்பாறையில் வனவிலங்கு -- மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்,' என்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...