கருவறையிலிருந்து கல்லறை வரை திட்டங்களை பெற்று வாழ்வுரிமையை காப்பாற்ற முதலமைச்சருக்கு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் கடிதம்!

கோவை: கருவறையிலிருந்து கல்லறை வரை திட்டங்களை பெற்று வாழ்வுரிமையை காப்பாற்ற தமிழக முதலமைச்சருக்கு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளனர்.


கோவை: கருவறையிலிருந்து கல்லறை வரை திட்டங்களை பெற்று வாழ்வுரிமையை காப்பாற்ற தமிழக முதலமைச்சருக்கு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளனர்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அண்ணா கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி. முருகேசன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் மாண்புமிகு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் கலைஞர் மு கருணாநிதி மற்றும் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களால் அமைக்கப்பட்ட தொழிலாளர் நல வாரியம் கடந்த நான்காண்டுகளாக சீர்கெட்டு தொழிலாளர்களை அலைகழிக்கும் போக்கு நடைபெற்று வருகிறது. SSS(Social Security Scheme) Labour officer தன்னிச்சையான அதிகாரத்தால் வரிசைப்படி தொழிலாளர்களுக்கு பணப்பயன் வழங்காமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரக்கணக்கான மனுக்கள் கேட்பாரற்று கிடக்கிறது. மீறி கேட்பவர்களின் மனுக்களை ஏதேனும் ஒரு காரணம் காட்டி திருப்பி அனுப்பும் நிலை தான் உருவாகி உள்ளது.

அதேசமயம், மேல்முறையிட வழியில்லாத காரணத்தால் கல்வியறிவு இல்லாத தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா நல வாரியத்தில் நலத்திட்டம் 1994இல் கட்டட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் விபத்து இழப்பீடு இயற்கை மரணம் உட்பட பல்வேறு நலத் திட்ட சலுகைகள் வழங்குவதற்கு மேற்படி திட்ட பிரிவு 11 முதல் 17 A வரை சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு SSS Labour officerஅவர்கள் விண்ணப்பங்கள் வரப்பட்ட நாளிலிருந்து தேர்வு செய்யப்படும் காலம் நிர்ணயம் செய்யப்படாத காரணத்தால் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன."

"கடந்த நான்காண்டுகளாக ஆட்சியிலிருந்த அரசின் மெத்தன போக்கால் தொழிலாளர் நல அலுவலர்களும் அக்கறை இன்றி செயல்பட்டு வந்ததற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நலத்திட்ட உதவி பெறப்படும் விண்ணப்பங்களை தேதி வாரியாக எண்ணிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உதவித்தொகை வழங்க வேண்டும். அல்லது அந்த மனு நிராகரிக்கப்பட்டால் அதன் காரணத்தை எழுத்து பூர்வமான அறிவிப்பினை தொழிலாளிக்கு தெரிவிக்க வேண்டும் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதாவது சட்டபிரிவு 11 முதல் 17 Aவகையிலான சலுகைகள் நிராகரிக்கப்பட்டால் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அத்துடன் மேல்முறையீடு செய்ய அந்தந்த மாவட்டத்திலேயே தொழிலாளர் துறை ஆணையர்(பணிக்கொடை) தொழிலாளர் இணை ஆணையர்(பணிக்கொடை) இருவரில், ஒருவர் மேல்முறையீடு அதிகாரியாக நியமித்து அரசாணை வெளியிட வேண்டும்."

"குறிப்பிட்ட கட்டுமான தொழிலாளர் நல திட்டம் 1994ல் உரிய திருத்தம் கொண்டு வருவதன் மூலமே தொழிலாளர்களின் நலதிட்டத்தை காப்பாற்ற முடியும். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணையோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேற்படி கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் கருவறையிலிருந்து கல்லறை வரை திட்டங்களை பெற்று வாழ்வுரிமையை காப்பாற்ற மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கையைமுன்வைக்கிறோம்."

இவ்வாறுகடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...