கோவை கல்லூரி மாணவி ஓவியத்தில் கின்னஸ் உலக சாதனை!

கோவை: கோவையில் கல்லூரி மாணவி ஓவியம் வரைந்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவி ஓவியம் வரைந்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கோவை தொண்டாமுத்தூர் உலியம் பாளையம் பகுதியில் வசிப்பவர் ரவிக்குமார் - ஆனந்த ஜோதி தம்பதியின் மகள் மோனிஷா ரவி (வயது 21). இவர் கோவையில் உள்ள சங்கரா கல்லூரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவருக்கு சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. கிடைக்கின்ற பேப்பர்கள், பென்சில்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சிறுவயதிலிருந்தே ஓவியங்களை வரையத் தொடங்கினார். அதில் தொடர்ந்து அவருக்கு நாட்டம் ஏற்படவே, தந்தை ரவிக்குமார், தாய் ஆனந்த ஜோதி ஆகியோர் மகளுக்கு உற்சாகத்தை ஊட்டினர். தொடர்ந்து அவர் பல்வேறு விதமான ஓவியங்களை வரையத் தொடங்கினார். கிளாஸ் பெயிண்டிங், பாட்டில் பெயிண்டிங், பென்சில் பெயிண்டிங், வேஸ்ட் பேப்பர் பெயிண்டிங் என பலவிதமான ஓவியங்கள் தீட்ட ஆரம்பித்தார்.

இதனிடையே, பல்வேறு உலகத் தலைவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களையும் வரைந்தார். இதனால் இவருடைய ஓவியத்திற்கு அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது. தொடர்ந்து இவர் பல்வேறு விருதுகளை பெற்று குவித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது மாவட்ட அளவில் விருதுகள், அதன்பிறகு தேசிய அளவிலான விருதுகள், அதைத்தொடர்ந்து இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு சாதனை என இவருடைய ஓவிய சாதனைகள் தொடர்ந்து கொண்டே சென்றது.

இந்த நிலையில், இவர் தற்போது கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தன்னுடைய முயற்சியைத் தொடங்கினார். இவர் தனி நபர் பெயிண்டிங்கில் 6,057.92 சதுர அடி நீளமுள்ள பேப்பரில் 13 மணி நேரம் தொடர்ந்து டூடுல் ஆர்ட் என சொல்லப்படும் தனிநபர் ஓவியத்தை நான்கு ஜட்ஜ் முன்னிலையில் வரைந்து அதை வீடியோ பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்பிவைத்தார்.



இதனைப் பார்த்த அவர்கள் இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு தகுதியானவர் என்பதற்கான சான்றுகளை வழங்கி கௌரவித்துள்ளன. தொடர்ந்து இவர் தமிழக அரசிற்கும் தன்னுடைய சாதனைகள் அடங்கிய ஓவியங்களையும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த விபரத்தை அனுப்பி தெரிவித்திருப்பதாக நம்மிடம் மோனிஷா கூறினார்.

கோவையில் உள்ள மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இவரை பாராட்டி வருகின்றன.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...