நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலாளர்கள் பணிக்கு குறைவாக வருவதால் மகசூல் அதிகரித்தும், தேயிலை பறிக்க ஆளில்லாமல் தோட்டத்திலேயே இலைகளை விடுவதால் தேயிலை தேக்கம் அடைந்து தேயிலை தொழில் பாதிப்படைந்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலாளர்கள் பணிக்கு குறைவாக வருவதால் மகசூல் அதிகரித்தும், தேயிலை பறிக்க ஆளில்லாமல் தோட்டத்திலேயே இலைகளை விடுவதால் தேயிலை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் தேயிலை தாெழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தொழிலை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் உள்ள நிலையில், சில எஸ்டேட்டுகளில் தேயிலை தொழிலாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு தேயிலை பறிக்கும் பணி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

மேலும், பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் இலைகள் பறிக்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதுபற்றி தேயிலை தோட்ட அதிபர்கள் கூறும்போது, கொரோனா தொற்றால் பல இக்கட்டான சூழலுக்கு தேயிலை தொழில் தள்ளப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தேயிலைகளைப் பறிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் விரைவாக மாவட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கான நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் வரும் வாரங்களில் தேயிலை விளைச்சல் மேலும் அதிகரிக்கும் என்பதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கொரோனா அச்சமின்றி பணியாற்றும் சூழலை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.