திருப்பூர்: ஊரக வேலை திட்டத்தில் ஜாதி பிரிவினையை ஏற்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான சம்பள தொகுப்பினை இனி மாநில அரசுகள் ஜாதிவாரியாக பட்டியல் வெளியிட்டு வழங்க வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அரசாணை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிலாளர்களை ஜாதிவாரியாக பிரிவினை ஏற்படுத்த கூடாது, 100 நாட்கள் வழங்கும் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக அதிகப்படுத்தவேண்டும், 15 நாட்களில் அவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.