பொள்ளாச்சி அருகே இரண்டு ஆடுகளை திருடிய வாலிபர் கைது - இருவர் தலைமறைவு!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளைகவுண்டன்புதூரில் இரண்டு ஆடுகளை திருடிய வாலிபர் கைது. மேலும், இருவர் தலைமறைவாகி உள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளைகவுண்டன்புதூரில் இரண்டு ஆடுகளை திருடிய வாலிபர் கைது. மேலும், இருவர் தலைமறைவாகி உள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளைகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டசாமி(42). இவர் அதே பகுதியில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் வழக்கம் போல கடந்த 19ம் தேதி தான் வளர்க்கும் 2 மாடுகளையும், 7 ஆடுகளையும் அடைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் 20ம் தேதி காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது, இரண்டு ஆடுகள் திருடு போனது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஆடு திருடர்களை தேடிவந்த போலீசார், நேற்று வடக்கிபாளையம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, சூலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(25), என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாப்பிள்ளைகவுண்டன்புதூரில் ஆடுகள் திருடிய சம்பவத்தில், ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 12 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான இரண்டு ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாகி உள்ள அவரது கூட்டாளிகளான சரவணன்(25), முருகன்(24), ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...