98 மாணவர்கள் 98 நிமிடத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் தரை ஓவியம் வரைந்து உலக சாதனை!

திருப்பூர்: 98 மாணவர்கள் 98 நிமிடத்தில் 5 நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் தரை ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.


திருப்பூர்: 98 மாணவர்கள் 98 நிமிடத்தில் 5 நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் தரை ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு 'கலாம் யூவி கல்வி அறக்கட்டளை' சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்தை மாணவர்கள் வரைந்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.



முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், ஆன்லைன் மூலம் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்த 98 மாணவர்கள், 98 இடங்களில், 98 நிமிடத்தில், 98 தரை ஓவியமாக கலைஞர் அவர்களின் உருவப் படத்தை வரைந்து 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற உலக சாதனையை படைத்துள்ளனர்.



இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எழிலரசன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டு தங்களது ஓவியத் திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.



இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கல்பனா கூறுகையில், பள்ளி மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வி அறக்கட்டளை இந்த ஓவியப் போட்டியை நடத்தி உள்ளது. கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாணவர்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இது அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உந்துகோலாக இருக்கும் என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...