கோவை: வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றைக் குறைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறது. முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கும் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் அடுத்ததாக 18 வயதிலிருந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகளைத் தடுப்பூசி மருந்தாக தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது.

வால்பாறை பகுதியில் சுகாதாரத் துறை மருத்துவர் பாவா லட்சுமணன் தலைமையில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி முகாம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு பிரிவுகள் அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களுக்கான சிறப்பு முகாமாக நடைபெற்று வருகிறது. வால்பாறை மற்றும் சோலையார் அணை பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாமை, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் துணை ஆட்சியர், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

பின்பு வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டது. கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் கொரோனா பெருந்தொற்று குறைந்த அளவு பரவி உள்ளதாகவும் கூடிய விரைவில் கொரோனா இல்லாத தாலுகாவாக வால்பாறை திகழவேண்டும் என்று சுகாதாரத் துறை ஆய்வாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அறிவித்தார். இந்த முகாமில் வால்பாறை வட்டாட்சியர் ராஜன், சுகாதாரத்துறை மருத்துவர் பாபு லட்சுமணன் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் அரசு ஊழியர்கள் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.