கோவை: கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு நேரத்தில் வால்பாறையில் அனாவசியமாக சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கி மற்றும் நியாயவிலைக் கடைகள், பால், மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைக் காரணம்காட்டி, பொதுமக்கள் ஏராளமானோர் வால்பாறை நகரில் சுற்றிய வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் வாகனங்களின் எண்களைப் பதிவு செய்து கொள்கின்றனர். தேவையின்றி வரும் வாகனங்களைத் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மீண்டும் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், சாலைகளில் அனாவசியமாக சாலையில் நடப்பவர்களைக் கண்டித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.