கோவை: வால்பாறை நகராட்சியின் சிறுவர் பூங்கா விளையாட்டு மைதானம் கழிவுநீர் சூழ்ந்த நிலையில் உள்ளதால், அதனைப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுவர் பூங்கா அருகே நகராட்சியின் கால்பந்தாட்ட மைதானம் உள்ளது. பல ஆண்டுகாலமாக இந்த மைதானத்தில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் வால்பாறை கால்பந்தாட்ட குழுவின் கோரிக்கையை ஏற்று நகராட்சி மூலம் கால்பந்தாட்ட மைதானம் சமப்படுத்துதல் மைதானத்தை சுற்றி வேலி அமைத்தல் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மைதானத்தில் இளம் சிறுவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஒரு வார காலமாக வால்பாறையில் கனமழை பெய்து வந்தது. மைதானத்திற்கு மேல் செல்லும் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி மைதானத்தில் நிரம்பியது. இதன் காரணமாக கால்பந்து மைதானம் கழிவு நீரால் சாக்கடை போல மாறியது.

மேலும் லாரி, வேன், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை மைதானத்திற்குள் இயக்கியதால் மைதானம் முற்றிலும் சேதமடைந்தது. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் அடைப்பு நீக்குவதோடு மைதானத்திற்குள் வாகனங்கள் செல்வதை தடை விதித்து பயன்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.