குன்னூர் அரசு மருத்துவமனைக்கு இலவசப் பொருட்கள்..!

நீலகிரி: கொரோனா பெருந்தொற்று சிகிச்சையில் இருப்பவர்களுக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டன.


நீலகிரி: கொரோனா பெருந்தொற்று சிகிச்சையில் இருப்பவர்களுக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டன.

குன்னூர் லாலி அரசு மருத்துவமனைக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனமான இம்பாவின் IMPA சார்பில் டிஜிட்டல் இசிஜி இயந்திரமும், நூறு நோயாளிகளுக்கு இலவச கம்பளியும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மூலமாக அரசு லாலி பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரமேஷிடம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகின்றனர்.



இந்தநிலையில், குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனமான இம்பா சார்பில் டிஜிட்டல் இசிஜி இயந்திரமும் நூறு நோயாளிகளுக்கு இலவச கம்பளியையும் சனிக்கிழமை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மூலமாக அரசு லாலி பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ரமேஷிடம் வழங்கப்பட்டது. இதில் இம்பாவின் சார்பாக மாநில பொருளாளர் அப்பு சந்திரசேகர், குன்னூர் கால்நடை மருத்துவமனை உதவி இயக்குநர் டாக்டர் பார்த்தசாரதி, வாசன் எஸ்டேட் அதிபர் ரவி முருகையா, டி.கே.சி.ராஜ், திமுக செயற்குழு உறுப்பினர் க.செல்வம் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...