கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வீரசிங்கம். இவரது மனைவி பஞ்சவர்ணம்(33) கட்டிடத் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கணவன், மனைவியான இருவரும் கடந்த 17ம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் கட்டுமானப் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கோவை சாலையில் சுந்தராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கிணத்துக்கடவு அருகே உள்ள தீயணைப்பு நிலையம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பஞ்சவர்ணம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பஞ்சவர்ணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் உயிரிழந்தார்.
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று பஞ்சவர்ணத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.