கோவை: கோவையில் சிறை கைதியின் வங்கி கணக்கில் இருந்து, நான்கு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்த போலீஸ்காரர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், சின்னகானுாரில் உள்ள ஒரு இரும்பு ஆலையில், இரும்பு திருடப்பட்டது தொடர்பாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, அவிநாசி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளியை கைது செய்தனர்.
திருடப்பட்ட இரும்பை வாங்கியதாக, அன்னூரில், பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் ஆனந்தன் என்பவரையும், போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்த ஆனந்தன், தனது வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது, நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல், பணம் எடுக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, மனித உரிமை ஆணையம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆனந்தன் அனுப்பிய மனுவில், 'நான் கைதானபோது, வங்கிக்கணக்கு, ஏ.டி.எம்., கார்டு, பின் நம்பர் ஆகியவற்றை, போலீஸ்காரர் ரஞ்சித் வாங்கி வைத்திருந்தார். நான் சிறையில் இருந்தபோது, ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் எடுத்துள்ளார்' என, கூறியிருந்தார்.
இதனையடுத்து, துறை ரீதியான விசாரணையை தொடர்ந்து, போலீஸ்காரர் ரஞ்சித்தை, 'சஸ்பெண்ட்' செய்து, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவிட்டார்.