கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை ஆணையாளராக பணியாற்றியவர் பவுன்ராஜ். இவர் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியது மற்றும் 15.62 கோடியில் காசோலை கொடுத்தது உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக குற்றப் பிரிவில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, தாவரவியல் பூங்கா பகுதியில் தடுப்பு சுவர் கட்ட பணிகளுக்கு 35.78 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. ஆனால், அந்த பணி செய்த நிறுவனத்திற்கு காசோலை வழங்காமல் வேறு ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்கு 17.87 லட்சம் வழங்கப்பட்டது. இதில் மணிக்குமார் என்ற ஒப்பந்ததாரருக்கு 17.91 லட்சம் காசோலை வழங்கி உள்ளார்.
தாவரவியல் பூங்கா பகுதியில் நடந்த பணிக்காக 35.78 லட்சத்தை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்காமல் கிரீன் பார்க் என்ற வேறு ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்கும், மணிக்குமாருக்கும் பவுன்ராஜ் முறைகேடாக வழங்கியதாக தற்போது வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் பவுன்ராஜ், ஒப்பந்ததாரர் மணிக்குமார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு பில் தொகை பெற்று வழங்கும் பொறுப்பில் உள்ள வால்பாறை நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன் மற்றும் கிரீன்பார்க் ஒப்பந்தம் நிறுவன உரிமையாளர் ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.