கோவை: கோவை அருகே முதியவரிடம் வீடு கட்டுவதற்காக மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று தருவதாக கூறி, தனது பெயருக்கு வீட்டை மாற்றி எழுதி வாங்கி மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை வெள்ளானை பட்டியைச் சேர்ந்தவர் மாச கவுண்டர் (81). வெள்ளானைப்பட்டியில் 4 சென்டில் இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 50 லட்சம்.
இதனிடையே, கண்ணம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கிய சார்லஸ் (44) என்பவர் மாசக்கவுண்டரை சந்தித்து பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் கடன் வாங்கினால் இரண்டு லட்ச ரூபாய் மானியம் கிடைக்கும் என தெரிவித்தார். இதற்காக வீட்டை தனக்கு அதிகாரப் பத்திரம் எழுதித் தருமாறு அவர் தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய மாசக் கவுண்டர் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
இதையடுத்து, ஆரோக்கிய சார்லஸ் வீட்டை கண்ணம் பாளையத்தை சேர்ந்த சுதா (43) என்பவருக்கு விற்பனை செய்தார். ஆவணத்தில் 13 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாச கவுண்டருக்கு வழங்கியதாக எழுதி வாங்கினார். தொடர்ந்து சுதா வீட்டை அடகு வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளார். இது குறித்து மக்களுக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, ஆரோக்கியதாஸ், சுதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.