கோவை: கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மண்டலங்களிலும் தூய்மைப் பணி தீவிரப்படுத்தப்பட்டு தினமும் மூன்று இடங்களில் மாஸ் கிளினீங் செய்ய மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கடந்த மாதத்தில் தினமும் 2,000 வரை இருந்த கொரோனா நோய் தொற்று பாதிப்பு தற்போது மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரத்துறையின் தீவிர தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளால் 500க்கு குறைந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா முழுமையாக கட்டுப்படுத்த வீடு வீடாக களப் பணியாளர்கள் மூலமாக உடல் பரிசோதனை பணிகள் அனைத்தும் மண்டலங்களின் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஐந்து மண்டலங்களிலும் தினமும் மூன்று இடங்களில் மாஸ் கிளினிக் என்னும் தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று 86வது வார்டு உக்கடம் லால்பேட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாஸ் கிளினீங் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.