உங்கள் தொகுதியில் முதல்வர் மனுக்களுக்கு விரைவில் தீர்வு - கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்!

கோவை: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், கோவை மாவட்டத்தில் பெற்றுள்ள, 35 ஆயிரத்து, 425 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், கோவை மாவட்டத்தில் பெற்றுள்ள, 35 ஆயிரத்து, 425 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது, 100 நாட்களில் தீர்வு காண, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார்.



அப்போது, கோவையில் பெறப்பட்ட, 35 ஆயிரத்து, 425 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மனுக்களின் உள்ள தகவல்கள் மற்றும் உண்மைத்தன்மைக்கு ஏற்ப, தகுதியானவை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். பெறப்பட்ட மனுக்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை பராமரிக்கும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, அடையாள எண் பெறப்பட்டு, மனுதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

மனுவின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப, தகுதியான மனுக்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, உடனடி தீர்வுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிசாமி, துணை ஆணையர் (கலால்) கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...