கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் தீவிரம் - 3 மாத காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்!

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் 3 மாத காலத்திற்குள் கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங், யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதேபோல, ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.



இதனிடையே, மேம்பாலப் பணிகள் கடந்த சில மாதங்களாக மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.



இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாத காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...