கோவை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொள்ளாச்சி பார்வர்ட் அறக்கட்டளை சார்பாக வால்பாறையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசின் கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதேபோல, பொள்ளாச்சியிலுள்ள பார்வர்ட் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் நிர்வாகிகள் வால்பாறையிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஏ.எல்.சுந்தர்ராஜன், செந்தில் முருகன், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வால்பாறையில் உள்ள ஸ்டான்மோர் ஆத்துமட்டம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, பெட்சீட் போன்ற நிவாரணப் பொருட்களை நேற்று வழங்கினர்.