சமூக ஆர்வலரின் தொடர் முயற்சியால் மாநகராட்சி இணையதளத்தில் தீர்மானங்கள் பதிவேற்றம்: ஆணையர் அதிரடி நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றக் கோரி, சமீபத்தில் புதிய மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்றுக்கொண்ட ராஜகோபால் சுன்கரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தீர்மானங்கள் மாநகராட்சி இளையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றக் கோரி, சமீபத்தில் புதிய மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்றுக்கொண்ட ராஜகோபால் சுன்கரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தீர்மானங்கள் மாநகராட்சி இளையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 4 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீர்மானங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர், ஆர்.டி.ஐ தியாராஜன் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.அதே சமயம், மாநகராட்சி தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்ற ஒப்பந்ததாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த இரு வழக்குகளில் நீதிமன்றம் எவ்வித தடை உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், மாநகராட்சி தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கடந்த 15 ஆம் தேதி மீண்டும் சமூக ஆர்வலர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 29 ஆம் தேதி வரை, மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட 191 தீர்மானங்கள் மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில், "கடந்த ஆண்டுகளில் மாநகராட்சி ஆணையர்களாக பொறுப்பு வகித்தவர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்மானங்கள் இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. மனு அளித்தவுடன், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட புதிய மாநகராட்சி ஆணையருக்கு நன்றி கூறிக்கொள்வதோடு, மீதமுள்ள தீர்மானங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...