கோவை: பொள்ளாச்சி அருகே தேவம்பாடி வலசு வழியாக அதிக பாரம் ஏற்றி அதிவேகத்தில் சென்ற ஐந்து டிப்பர் லாரிகளைப் பறிமுதல் செய்து ரூ.3.40 லட்சம் அபராதம் விதித்து ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு உள்ளிட்ட பகுதிகள் வழியாக முறைகேடாகக் குவாரிகளில் இருந்து கருங்கல் எடுத்துச் செல்வதாகவும், கருங்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் கிராமப்புறம் வழியாக அதிவேகத்தில் இயக்கப் படுவதாகவும், பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று தேவம்பாடி வலசு வழியாக கேரளாவுக்கு கருங்கல் ஏற்றிச் சென்ற கேரள பதிவு எண் கொண்ட ஐந்து டிப்பர் லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர்கள், உரிய அனுமதியின்றியும், அதிக பாரம் ஏற்றி, அதிவேகத்தில் வாகனங்களை இயக்கிய ஐந்து டிப்பர் லாரிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர்களுக்கு ரூபாய் 3 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல் குவாரிகளால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் இதனால், வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.