கோவையில் காணாமல் போன 24 சிறுவர்கள் மீட்பு; அதிகாரிகள் துரித விசாரணை

கோவை: கோவையில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு பெண் அலுவலர்கள், 24 சிறார்களை மீட்டுள்ளனர்.


கோவை: கோவையில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு பெண் அலுவலர்கள், 24 சிறார்களை மீட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம், 40 காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பதியப்படும் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை விசாரிப்பதில், பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தது. வழக்குகளை விரைவில் முடித்து, காணாமல் போனவர்களை கண்டறிய, மாவட்ட போலீஸ் துறை சார்பில், பெண் அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்தனர்.

மூன்று மகளிர் காவல் நிலையங்கள் தவிர்த்து, 35 காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு சிறப்பு பெண் அலுவலர் என 35 பேர் நியமிக்கப்பட்டனர்.

இதனால், கடந்த இரு மாதங்களாக காணாமல் போனவர்கள் குறித்து பதியப்பட்ட வழக்குகளுக்கு விரைந்து தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மொபைல்போன் டவர் மூலம், காணாமல் போனவர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், கடந்த ஏப்., மாதம் பதிவான, 72 வழக்குகளில், 42 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் காணாமல் போனது குறித்து பதிவு செய்யப்பட்ட, 22 வழக்குகளில், 14 சிறார்கள் கண்டறிப்பட்டனர். மே மாதம் பதியப்பட்ட, 41 வழக்குகளில், 33 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், 12 வழக்குகளில், 10 சிறுவர்கள் மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி., சுகாசினி கூறுகையில், "'பிரத்யேக அலுவலர்கள் நியமிக்கப்பட்டதால் வழக்கு விரைந்து முடிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாவட்ட போலீசாருடன் தொடர்பு கொண்டு பணிகளை விரைந்து முடிக்கின்றனர். மீட்கப்படும் குழந்தைகளுக்கு கவுன்சிலிங்கும் வழங்குகிறோம்,'' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...