கோவை: இந்திய ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது எனவும் மாநில அரசிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகைகளை வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை ஒதுக்கிட வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் மாநிலக்குழு போராட்ட அறிவிப்பு விடுத்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், விசிக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டு கூட்டம் வெள்ளியன்று (இன்று) சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வருகிற 28, 29,30 ஆகிய மூன்று நாட்களில், ஒன்றிய அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வரும் 28 ஆம் தேதியன்று வால்பாறை, ஆனைமலை, கோட்டூர், பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, மலுமிச்சம்பட்டி, மதுக்கரை, தொண்டாமுத்தூர். பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், எஸ்.எஸ்.குளம், சூலூர். சின்னியம்பாளையம், கரும்பத்தம்பட்டி, சுல்தான்பேட்டை ஆகிய மையங்களிலும், வரும் 29 ஆம் தேதியன்று குனியமுத்தூர், துடியலூர். சிவானந்தபுரம், ஒண்டிபுதூர், ஆவாரம்பாளையம், புலியகுளம், சித்தாபுதூர், காந்திபார்க், பி.என்.புதூர், ரத்தினபுரி, கணபதி ஆகிய மையங்களிலும், 30 ஆம் தேதியன்று மையப்படுத்தப்பட்ட அளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில், ஊழியர்கள் திரளாகவும், நோய்த்தடுப்பு விதிகளுக்குட்பட்டு முககவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றி இயக்கத்தை வெற்றிகரமாக்கிட கூட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
இக்க்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, கே.மனோகரன், கே்அஜய்குமார், சிபிஐ மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் நிர்வாகிகள் சிவசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் சிபிஐ(எம்எல்) கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.