கிணத்துக்கடவு பொது சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் பணி: எம்எல்ஏ தாமோதரன் ஆய்வு

கோவை: கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையம் பொது சுகாதார மையத்தில் கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாகத் தடுப்பூசி போடும் பணியை எம்எல்ஏ தாமோதரன் ஆய்வு செய்தார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையம் பொது சுகாதார மையத்தில் கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாகத் தடுப்பூசி போடும் பணியை எம்எல்ஏ தாமோதரன் ஆய்வு செய்தார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட அரிசிபாளையம் பகுதியிலுள்ள பொது சுகாதார நிலையத்தில் இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கு கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு ஊசி போடப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டுத் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



மேலும், பொது சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...