கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கி உதவி..!

கோவை: கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.


கோவை: கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலையில் பல ஏழை மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தசூழலில், கோவையைச் சேர்ந்த ‘ஹியூமானிட்டி ஆஃப் பிப்பில்’ என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மக்களுக்கு தங்களது உதவிகளை செய்து வருகின்றனர்.



இதுகுறித்து தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சூர்யா கூறுகையில், “கொரோனா முதல் அலையின் போது இந்த அமைப்பை மார்ச் மாதம் 23.03.2020 தேதி அன்று தொடங்கினோம். அப்போது 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களையும், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி பொருட்களையும் வழங்கினோம்.



சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களும் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கும் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் மளிகைப் பொருட்களும் மற்றும் 100-க்கும் மேற்பட்ட குறவன் குறத்தி இன மக்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.



மற்றும் swiggi & Zomato பணியாளர்களுக்குத் தேவையான கொரோனா பாதுகாப்புப் பொருட்கள், ஒரு சில நாளில் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 250 மில்லி லிட்டர் பால் இலவசமாக வழங்கவும் மற்றும் 400-க்கும் மேற்பட்ட ஆனைகட்டி மலைவாழ் மக்களுக்கு 10 நாட்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்.'' என்றார்.



இந்த சமூக செயல்பாடுகளை சூர்யா, விசால், செ.பிரசாந்த், ராமசாமி, பிரவீன், அகிலன், விஷ்வா, அக்சை, மற்றும் சௌமியா ஆகியோர் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...