உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில்‌ ஆன்லைன்‌ இசை, யோகா நிகழ்ச்சி!

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில்‌ சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும்‌ யோகா கற்றுக்கொடுக்கும்‌ நிகழ்வு ஆன்லைன்‌ வாயிலாக நாளை(ஜூன்‌ 19) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில்‌ சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும்‌ யோகா கற்றுக்கொடுக்கும்‌ நிகழ்வு ஆன்லைன்‌ வாயிலாக நாளை(ஜூன்‌ 19) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

சுமார்‌ ஒன்றரை மணி நேரம்‌ நடக்கும்‌ இந்த நேரம ஒளிபரப்பு நிகழ்ச்சியில்‌ புகழ்பெற்ற இசை கலைஞர்கள்‌ பத்மஸ்ரீ டாக்டர்‌ சீர்காழி சிவ சிதம்பரம்‌, கலைமாமணி காய்த்ரி கிரீஸ்‌, அனுஷா தியாகராஜன்‌ ஆகியோர்‌ குரலிசை நிகழும்‌. அத்துடன்‌, யூ.பி.ராஜூ மற்றும்‌ நாகமணி ராஜூ தம்பதியினரின்‌ மாண்டலின்‌ இசை, நெய்வேலி எஸ்‌.ராதாகிருஷ்ணா அவர்களின்‌ வயலின்‌ இசை, ராஜாராமன்‌ அவர்களின்‌ கடம்‌ இசை, என்‌.ராமகிருஷ்ணன்‌ அவர்களின்‌ மிருதங்கம்‌ இசை நிகழ்ச்சிகளும்‌ தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதற்கு இடையில்‌, யோகா தினம்‌ தொடர்பாக சத்குருவின்‌ சிறு உரையும்‌, நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்‌ சிம்ம க்ரியா' என்ற யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கும்‌ நிகழ்வும்‌ நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி ஈஷாவின்‌ அதிகாரப்பூர்வ யூ - டியூப்‌ சேனலான Sadhguru Tamil சேனலில்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்‌.

கொரோனா பாதிப்பால்‌ மன அழுத்தம்‌, பயம்‌, உடல்‌ நலன்‌ பாதுகாப்பு போன்றவை அதிகரித்துள்ள இந்த சூழலில்‌ இந்த இசை நிகழ்ச்சியும்‌ யோகாவும்‌ அதில்‌ இருந்து வெளி வர உறுதுணையாக இருக்கும்‌.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...