கோவை: வால்பாறை - பொள்ளாச்சி பிரதான சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் 40 கிலோ மீட்டர் பகுதிகளில் 40 கொண்டை ஊசி வளைவுகளுடன் மலைச்சாலை உள்ளது. வால்பாறை சுற்றுலாத்தலமாக உள்ளதால் ஏராளமான வாகனங்கள் வால்பாறைக்கு வந்து செல்கின்றன.
இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறுகிய சாலை பகுதிகள் அகலப்படுத்தப்பட்டு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அய்யர்பாடி பாரளை எஸ்டேட் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக சாலைகளில் எவ்வித இடையூறும் இன்றி வாகனங்கள் சென்று வர ஏதுவாகும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். மேலும் வால்பாறையிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அனைத்து சாலைகளிலும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.