கோவை: நெகமம் அருகே திருமணமான மூன்றே நாட்களில் பெண் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(30), கூலித்தொழிலாளி. இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த அமுதா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இதனிடையே, கருப்புச்சாமிக்கும், அமுதாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர். அமுதா திண்டுக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கருப்புச்சாமி தாசநாயக்கன்பட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கருப்புச்சாமி கடந்த 25 நாட்களுக்கு முன்பு நெகமம் அருகே உள்ள ஜக்கார்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது, அதேபகுதியை சேர்ந்த அம்சவேணி(24) என்ற உறவினர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 14ம் தேதி அம்சவேணியை கருப்புச்சாமி அழைத்து சென்று பெதப்பம்பட்டியில் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், அம்சவேணியின் அம்மா, அப்பா இருவரும் கருப்புச்சாமியிடம் முதல் மனைவி அமுதாவிடம் விவாகரத்து, செய்து கையெழுத்து வாங்கி வரச்சொல்லி உள்ளனர். கருப்புச்சாமி அமுதாவிடம் சென்று கையெழுத்து வாங்கி வருவதாக கூறி சென்று உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அம்சவேணி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணிபவுடர் குடித்து மயங்கி கிடந்தார்.
இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அம்சவேணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.