ஆன்லைன் வகுப்பு: ஸ்மார்ட்போன் இல்லாத ஏழை எளிய மாணவர்கள் பட்டியல் திரட்டும் பணி தொடக்கம்!

கோவை: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க 'ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவர்களின் பட்டியல் அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


கோவை: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க 'ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவர்களின் பட்டியல் அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீட்டில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக, அரசுப் பள்ளிகளுக்கான தேவைகள், ஆண்டுதோறும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கற்றல், மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டில் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள் தவிர, வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பெரியளவில் நிதி ஒதுக்கவில்லை.

இந்நிலையில், 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க 'ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவர்களின் பட்டியல் அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்வியாண்டு துவங்கவுள்ள நிலையில், கொரோனா மூன்றாம் அலையை தடுக்க ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. ஆன்லைன் மூலமே கற்பித்தல் பணி துவங்க உள்ளதால், மாவட்ட வாரியாக, ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் பட்டியல் திரட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் தடைபடாமல் இருக்க, விரைவில் தகவல் சமர்ப்பிக்குமாறு, ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...