குளக்கரையில் உடைப்பு: கோவையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் 8 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெங்காயம் நீரில் மூழ்கி நாசம்!

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கோவையில் குளக்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் 8 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெங்காயம், கரும்பு நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குளக்கரையில் உடைப்பு ஏற்பட்டதால் 8 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெங்காயம், கரும்பு நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கோவை செம்மேடு பகுதியிலுள்ள உக்குளத்த்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களில் புகுந்ததால் சுமார் 8 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் மற்றும் கரும்பு நீரில் மூழ்கியது.



மேலும், தொடர் மழை காரணமாக இன்று காலை உக்குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் உடனடியாக பொதுப்பணி அதிகாரிக்கு தகவலளித்ததுடன் அதிகாரிகள் வருவார்கள் என விவசாயிகள் காத்திருந்துள்ளனர்.



ஆனால், அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததுடன் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைத்து சரி செய்தனர்.

இதுகுறித்து, விவசாயிகள் தொடர் மழை காரணமாக குளம் நிரம்பி காலையில் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவலளித்தும் மாலை வரை அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.



மேலும், தாமதித்ததால் நீர் முழுவதும் விவசாய நிலங்களுக்குள் சென்றுவிடாமல் இருக்க நாங்களே ஜேசிபி இயந்திரத்தை கொண்டு உடைப்பை சரி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



4 ஏக்கரில் சின்ன வெங்காயம், 4 ஏக்கரில் கரும்பு என மொத்தம் 8 ஏக்கரில் விவசாயம் செய்து வருவதாகவும் விதைத்து 15 நாட்களே ஆன சின்ன வெங்காயம் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகியுள்ளதாகவும், 6 மாத பருவத்தில் இருக்கும் கரும்பு முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இழப்பீடாக ஏக்கருக்கு மூன்று லட்சம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...