கோவை: கோவையில் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல மாலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இயங்கி வரும் பிரபலமான அடுக்குமாடி வணிக வளாகம் ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகள் 55 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மால்களில் உள்ள கடைகள் செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கோவை மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 25வது வார்டு கிருஷ்ணசாமி சாலையில் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால் உள்ளது. இந்த மாலில் ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்திலும் உணவுக் கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு பறக்கும் படையினர் சோதனையிட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதன் பேரில் நேற்று பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 10 உணவுக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அனைத்து உணவு கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவிட்ட அதிகாரிகள், ஒவ்வொரு கடைக்கும் 5 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதித்தனர் . மொத்தம் 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.