கோவை: கோவையில் ஹோட்டலின் விளம்பரப் பலகை விழுந்து மூன்று பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை, காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பிரிவு அருகே TN43 ஹோட்டல் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கடையை ஒட்டி சாலையோர வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, கடையின் விளம்பரப் பலகை விழுந்ததில் அருகே கடை அமைத்து விற்பனை செய்து வந்த கணுவாய்ப்பாளையத்தை சேர்ந்த வியாபாரிகள் செல்வராஜ், குஞ்சா, பொன்னம்மாள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், செல்வராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், இன்று வியாபாரி செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலின் விளம்பரப் பலகை விழுந்து படுகாயமடைந்த மூவரில் வியாபாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.